திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை ரத்து


திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை ரத்து
x
தினத்தந்தி 29 April 2021 12:23 AM IST (Updated: 29 April 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை ரத்து நேற்று முதல் செய்யப்பட்டது.

திருச்சியில் இருந்து
கோலாலம்பூருக்கு விமான சேவை ரத்து
செம்பட்டு, ஏப்.29-
கொரோனா ஊரடங்கின் போது வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி, திருச்சியில் இருந்தும் கோலாலம்பூருக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. 
கடந்த 25-ந்தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து வந்து செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் திருச்சியில் இருந்து துபாய், சார்ஜா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் நேற்று முதல் மறுஅறிவிப்பு வரும்வரை இயக்கப்பட மாட்டாது என்று மலேசிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்த விமானங்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story