பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு தடை


பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு தடை
x
தினத்தந்தி 29 April 2021 12:41 AM IST (Updated: 29 April 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்குள் செல்ல பொதுமக்களுக்கு தடை

பூதப்பாண்டி:
குமரி மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், தொற்று தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு ெதாற்று ஏற்பட்டதால் 2 முறை மூடப்பட்டது. தற்போது தொற்று காரணமாக இறச்சகுளம் பகுதியில் 2 பேர் பலியாகி உள்ளனர். அதைதொடர்ந்து பூதப்பாண்டி போலீஸ் நிலைய வளாகத்தில் சானிடைசர் வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு மக்களுக்கு தெரியும்படி சுவரில் ஒட்டப்பட்டுள்ளது. ேமலும், போலீஸ் நிலைய வளாகத்தில் கயிறுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் இருந்து போலீசார் வெளியில் நின்று மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story