முக்கூடல் பஸ்நிலையத்தில் வேன் நிறுத்தம் அமைக்க வேண்டும்- டிரைவர்கள் சங்கம் வலியுறுத்தல்


முக்கூடல் பஸ்நிலையத்தில் வேன் நிறுத்தம் அமைக்க வேண்டும்- டிரைவர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2021 1:06 AM IST (Updated: 29 April 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் பஸ்நிலையத்தில் வேன் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என டிரைவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

முக்கூடல், ஏப்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, நகர செயலாளர் லட்சுமணன், வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் நலச்சங்க தலைவர் ராஜரத்தினம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சந்திரமோகன் ஆகியோர் முக்கூடல் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முக்கூடல் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா வேன்கள், கார்கள் உள்ளன. அவற்றை புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கு முன்பாக அந்த இடத்தில் நிறுத்திவைத்து வந்தோம். பஸ் நிலையம் கட்டுவதற்காக, பேரூராட்சியின் அறிவுறுத்தல்படி வாகனங்களை அந்த இடத்துக்கு பதிலாக முக்கூடல் வாட்டர் டேங்க் பகுதியில் நிறுத்தி வருகிறோம். 
தற்போது அந்த பகுதி போக்குவரத்து மற்றும் தாங்கள் சென்று வருவதற்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே முக்கூடல் பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்குள்ளேயே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுலா வேன்கள், கார்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்துதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story