ஏலச்சீட்டு நடத்தி 68 பேரிடம் ரூ.71½ லட்சம் மோசடி


ஏலச்சீட்டு நடத்தி 68 பேரிடம் ரூ.71½ லட்சம் மோசடி
x
ஏலச்சீட்டு நடத்தி 68 பேரிடம் ரூ.71½ லட்சம் மோசடி
தினத்தந்தி 29 April 2021 1:07 AM IST (Updated: 29 April 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்தி 68 பேரிடம் ரூ.71½ லட்சம் மோசடி

கோவை

கோவை போத்தனூரில் கொங்கு தமிழ் அன்னை சிட்பண்ட் என்ற ஏலச்சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர்களாக ரொனால்டு ரீகன் டேவிட், அவருடைய தந்தை டேவிட் சாமுவேல், நண்பர் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி பலரிடம் பணம் வசூல் செய்தனர். போத்தனூர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அன்சாரி (வயது34) என்பவர் இவர்களது சீட்டு நிறுவனத்தில் சேர்ந்தார். 

இவர் ரூ. 5 லட்சம் பணம் செலுத்தியும் முதிர்வு அடைந்த தொகையை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் உரிமையாளர்கள் சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து அன்சாரி முதலில் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் விசாரணை நடத்தியபோது சுமார் 68 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்   சீட்டு நிறுவன  உரிமையாளர்கள் ரொனால்டு ரீகன் டேவிட், அவருடைய தந்தை டேவிட் சாமுவேல், நண்பர் ராஜேந்திரன் 3 பேர் மீது  கூட்டுசதி, ஏமாற்றுதல், முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டம் (டேன்பிட்) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

68 பேரிடம் சுமார் ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மோசடி நடைபெற்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த சீட்டு நிறுவனத்தில் மேலும் பலர் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணம் செலுத்திய ஆவணங்களுடன் வந்து புகார் செய்யுமாறு போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story