மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் மரங்களும் சமூகத்தின் ஓர் அங்கம் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் பள்ளிப் பருவத்திலேயே விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நிலவளம், நீர்வளம் காக்க 10 ஆயிரம் பனை விதைகளை கண்மாய் கரையோரங்களில் விதைத்தனர். பின்னர் காற்று வளம் காக்கும் முயற்சியாக ஆக்சிஜனை அதிக அளவில் தரக்கூடிய அரச மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர். நிகழ்ச்சிக்கு மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன் தலைமை தாங்கினார்.பள்ளியின் நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ், நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். தமிழாசிரியை மகாலெட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story