கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி - தொற்றுக்கு ஒரே நாளில் 454 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி - தொற்றுக்கு ஒரே நாளில் 454 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 April 2021 7:45 PM GMT (Updated: 28 April 2021 7:50 PM GMT)

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியான நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் கடந்த 26-ந் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 279 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 707 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 795 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன்அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story