மோட்டார்சைக்கிளில் சென்றபோது புளியமரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம்
மோட்டார்சைக்கிளில் சென்றபோது புளியமரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம்
அரூர், ஏப்.29-
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 39), சித்தராஜ் (39) ஆகிய 2 பேர் நேற்று மாலை 3 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் கருமந்துறையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அரூர் அருகே தீர்த்தமலை சாலையில் வாலெடுப்பு என்ற இடத்தில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் கிளை முறிந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. இதில் வெங்கடேஷ், சித்தராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சாலையில் விழுந்து கிடந்த புளியமரக்கிளையை அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
========
Related Tags :
Next Story