மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேர் கைது


மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 1:16 AM IST (Updated: 29 April 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பரசுராம் தெருவை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 27). இவர்  டவுன் போலீசில் உள்ள குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் விருதுநகர் ரோடு பாவடி தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகத்தில் வந்த  3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அருப்புக்கோட்டை சின்ன புளியும் பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (23), அஜித் குமார் (23), சூரிய பிரகாஷ் (24) என்பதும், அவர்கள் வந்தது செல்வமுருகனின் மோட்டார்சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
 

Next Story