ஊருணியில் நிரந்தரமாகதண்ணீர் சேமித்து வைக்கப்படுமா?


ஊருணியில் நிரந்தரமாகதண்ணீர் சேமித்து வைக்கப்படுமா?
x
தினத்தந்தி 28 April 2021 7:51 PM GMT (Updated: 28 April 2021 7:51 PM GMT)

தாமரைப்பூக்கள் அதிகம் மலர்வதால் ஊருணியில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரியாபட்டி, 
நரிக்குடியில் இருந்து பார்த்திபனூர் செல்லும் சாலையில் இருஞ்சிறை விலக்கு அருகே அய்யனார் கோவில் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் தண்ணீர் நிரம்பியதால் தாமரைப்பூக்கள் பூத்து நன்றாக மலர்ந்துள்ளன. 
இந்த பூக்களை இந்த பகுதியில் கோவில்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊருணியில் தண்ணீர் வற்றும் நிலை இருந்து வருகிறது. 
எனவே ஊருணியை தூர்வாரி தண்ணீரை நிரந்தரமாக சேமித்து வைத்து தாமரைப்பூக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story