கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடி ஐந்து விலக்கு அருகே தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம்முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், பசுமை தமிழகம் மாவட்ட அமைப்பாளர் தமிழ் கார்த்தி, ஆம் ஆத்மி கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அப்துல் ஜாபர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story