மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தபால் அலுவலகங்கள் மதியம் 2மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தபால் அலுவலகங்கள் மதியம் 2மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநேரம்
இதுகுறித்து தமிழ்நாடு தபால் துறை சார்பில் அனைத்து தபால் துறை பிரிவு தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து தபால் அலுவலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இதன்படி அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.
அறிவிப்பு பலகை
இதுதொடர்பான அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் அனைத்து தபால்அலுவலங்களிலும் வைக்க வேண்டும்.
தபால்சேவை, விரைவு தபால் பதிவு, தபால்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித காலதாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான ஊழியர்களையும் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அலுவலகங்களில் பணிபுரியும் வீடுகளிலிருந்து பணிபுரியும் ஊழியர்களின் விவரங்களை தினசரி குறித்து வைக்க வேண்டும்.
கிருமி நாசினி
தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெற ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் வழங்க வேண்டும்.
தபால் அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை உறுதிசெய்யவேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story