மாவட்ட செய்திகள்

நெல்லையில் தனியார் விடுதியில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை + "||" + Photo studio owner commits suicide at private hotel in Nellai

நெல்லையில் தனியார் விடுதியில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை

நெல்லையில் தனியார் விடுதியில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை
நெல்லை சந்திப்பில் தனியார் விடுதியில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை, ஏப்:
நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்

நெல்லை பேட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெபஸ்டியான் பாரதி (வயது 38). இவர் அந்த பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வந்தார். திருமணமான. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது அறை திறக்காமல் இருந்தது.

விஷம் குடித்து தற்கொலை

இதில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அறையின் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அந்தோணி ஜெபஸ்டியான் பாரதி விஷம் குடித்து இறந்து கிடந்தார்.உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டிட தொழிலாளி தற்கொலை
பேட்டையில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. விவசாயி தற்கொலை
கடையநல்லூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.