உதவித்தொகை வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும்


உதவித்தொகை வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2021 1:34 AM IST (Updated: 29 April 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

உதவித்தொகை வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாகராஜன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதோடு பல மாதங்கள் சேர்த்து உதவித்தொகை வழங்கும் முறை உள்ளது. எனவே உதவித்தொகை அந்தந்த மாதத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி கிடைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மனுக்கள் கொடுப்பவர்களுக்கு உரிய உபகரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறும் போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
---------

Next Story