வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை- 5 இடங்களில் நடந்தது
தென்காசி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை 5 இடங்களில் நடந்தது.
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை 5 இடங்களில் நடந்தது.
கொரோனா பரிசோதனை
வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சமீரன் கூறினார்.
அதன்படி நேற்று தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்திலும், சங்கரன்கோவில் தொகுதிக்கு கோமதி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும், கடையநல்லூர் தொகுதிக்கு பழைய தாலுகா அலுவலகத்திலும், ஆலங்குளம் தொகுதிக்கு ஆலங்குளம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும் இந்த பரிசோதனை நடைபெற்றது.
மாதிரிகள்
வேட்பாளர்களின் முகவர்கள் இதில் கலந்துகொண்டு மாதிரிகளை கொடுத்தனர்.
இந்த பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story