சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு


சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 29 April 2021 1:44 AM IST (Updated: 29 April 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

கடையநல்லூர், ஏப்:
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் தென்காசி மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நகர தலைவர் முருகன், செயலாளர் ஜெகன் மற்றும் பலர் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பசி மற்றும் கடன் தொல்லை காரணமாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட ரூ.2000 நிவாரண உதவியும் தங்களில் பலருக்கு கிடைக்க வில்லை. அந்த பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில் மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்பது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே சலூன் கடைகளை திறந்து, செயல்பட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் ெதரிவித்து உள்ளனர்.

Next Story