ெரயிலில் அடிபட்டு முதியவர் பலி


ெரயிலில் அடிபட்டு முதியவர் பலி
x
தினத்தந்தி 29 April 2021 1:46 AM IST (Updated: 29 April 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர், 
விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ெரயில்வே மேம்பாலத்திற்கு கீழ்உள்ள ெரயில் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. நீல நிற சட்டையும் கைலியும் அணிந்திருந்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த விருதுநகர் ெரயில்வேபோலீசார் அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story