உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியது: கர்நாடகத்தில் புதிய உச்சமாக 39,047 பேருக்கு கொரோனா
உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கர்நாடகத்தில் புதிய உச்சமாக 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கர்நாடகத்தில் புதிய உச்சமாக 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிகிச்சை பெறுவோர்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 71 ஆயிரத்து 997 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 39,047 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 229 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 36 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 11,833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 95 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,192 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 28 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் 137 பேர்
பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 22,596 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 333 பேர், பல்லாரியில் 1,106 பேர், பெலகாவியில் 360 பேர், பெங்களூரு புறநகரில் 732 பேர், பீதரில் 269 பேர், சாம்ராஜ்நகரில் 424 பேர், சிக்பள்ளாப்பூரில் 683 பேர், சிக்கமகளூருவில் 297 பேர், சித்ரதுர்காவில் 110 பேர், தட்சிண கன்னடாவில் 664 பேர், தாவணகெரேயில் 196 பேர், தார்வாரில் 654 பேர், கதக்கில் 129 பேர், ஹாசனில் 1,001 பேர், ஹாவேரியில் 36 பேர், கலபுரகியில் 901 பேர், குடகில் 388 பேர், கோலாரில் 1,194 பேர், கொப்பலில் 444 பேர், மண்டியாவில் 935 பேர், மைசூருவில் 1,759 பேர், ராய்ச்சூரில் 511 பேர், ராமநகரில் 164 பேர், சிவமொக்காவில் 333 பேர், துமகூருவில் 1,174 பேர், உடுப்பியில் 664 பேர், உத்தரகன்னடாவில் 301 பேர், விஜயாப்புராவில் 394 பேர், யாதகிரியில் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 137 பேரும், மைசூருவில் 11 பேரும், மண்டியாவில் 9 பேரும், பாகல்கோட்டையில் 2 பேரும், பல்லாரியில் 8 பேரும், பெங்களூரு புறநகரில் 2 பேரும், பீதரில் 6 பேரும், சாம்ராஜ்நகர், தாவணகெரே, கலபுரகியில் தலா 3 பேரும், சிக்கமகளூரு, ராமநகர், சிவமொக்கா, யாதகிரி, துமகூருவில் தலா 5 பேரும், தட்சிண கன்னடா, தார்வார், கோலாரில் தலா 4 பேரும் என மொத்தம் 229 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் சற்று குறைந்த நிலையில் நேற்று வைரஸ் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story