‘‘நீங்கள் சாவது நல்லது’’; விவசாய சங்க பிரதிநிதியிடம், மந்திரி உமேஷ் கட்டி கூறிய கருத்தால் சர்ச்சை
2 கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லது என்று, விவசாய சங்க பிரதிநிதியிடம், மந்திரி உமேஷ்கட்டி கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: 2 கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லது என்று, விவசாய சங்க பிரதிநிதியிடம், மந்திரி உமேஷ்கட்டி கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நீங்கள் சாவது நல்லது
உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி உமேஷ்கட்டியை கதக் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 கிலோ அரிசியை 2 கிலோவாக அரசு குறைத்துள்ளது நியாயம்தானா? என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு உமேஷ்கட்டி, வட கர்நாடகத்தில் அரிசியுடன் கோதுமையும் வழங்குகிறோம். ஊரடங்கு நேரத்தில் 5 கிலோ அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. அடுத்த மாதம் முதல் இந்த அரிசி வழங்கும் பணி தொடங்கப்படும்" என்றார்.
அப்போது அந்த பிரதிநிதி, "ஊரடங்கு அமலில் உள்ளது. அரிசி வழங்கும் வரை நாங்கள் சாப்பிடாமல் சாக வேண்டுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு உமேஷ்கட்டி "2 கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லது. அதற்கு முன்பு அரிசியை விற்பனை செய்யும் தொழிலை நிறுத்த வேண்டும். இனி எனக்கு நீங்கள் போன் செய்யக்கூடாது" என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
கடும் கண்டனம்
உமேஷ்கட்டியுடன் விவசாய சங்க பிரதிநிதி பேசிய இந்த சர்ச்சை கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உமேஷ்கட்டியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் கூறிய கருத்திற்காக உமேஷ்கட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் அந்த கருத்தை கூறி இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா...
முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாயி ஒருவர், உணவுத்துறை மந்திரி உமேஷ்கட்டியிடம் பேசிய போது ஏழை குடும்பத்தினருக்கான அரிசியை குறைத்தது குறித்து கேட்டார். அதற்கு மந்திரி உமேஷ் கட்டி, ‘‘நீ செத்தால் நல்லது தான்’’ என்று கூறியது தவறு. ஒரு மந்திரியாக இந்த வார்த்தையை அவர் கூறி இருக்கக்கூடாது. வட கர்நாடகத்தில் கோதுமை வேண்டாம் என்றால் 5 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உமேஷ்கட்டி கூறிய கருத்திற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story