கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கு கொரோனா


சபாநாயகர் காகேரி.
x
சபாநாயகர் காகேரி.
தினத்தந்தி 29 April 2021 2:54 AM IST (Updated: 29 April 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் காகேரி கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இங்கு தினசரி 20 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. 

இதனால் நகரில் அரசு-தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த கொரோனா மக்கள் பிரதிநிதிகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து அவர்கள் 2 பேரும் மீண்டனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவாக குணம் அடைய வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 கொரோனா பாதிப்புக்கு உள்ளான சபாநாயகர் காகேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிர்சியில் நடந்த திருமணத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story