சேலம் மாநகராட்சியில் 79 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு-ஆணையாளர் ரவிச்சந்திரன் தகவல்
சேலம் மாநகராட்சியில் 79 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன என்று ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
சேலம்:
சேலம் மாநகராட்சியில் 79 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன என்று ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
கொரோனா நோய் தொற்று
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல பகுதிகளில், கொரோனா நோய் தொற்று கண்டறியும் களப்பணியாளர்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் 3 பேர்களுக்கு மேல் நோய் தொற்று பாதிக்கப்பட்ட 79 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் முழு அளவில் சுகாதாரப் பணிகளும், தேவையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் 170 களப்பணியாளர்கள் வீதம் மொத்தம் 680 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆய்வு செய்தார்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக பயணிகளை ஏற்றி வந்த 2 தனியார் பஸ் மற்றும் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மாலுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று விதி முறை மீறி செயல்பட்ட 66 தனி நபர்களுக்கு தலா ரூ.200 வீதமும், 34 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், மொத்தம் ரூ.50 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அஸ்தம்பட்டி மண்டலம், கோவிந்தக்கவுண்டர் தோட்டம் பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறிதல் மற்றும் சளி தடவல் பரிசோதனை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் சரவணன், ராம்மோகன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story