சேலம் அருகே வெவ்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அருகே வெவ்வேறு இடங்களில், புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சூரமங்கலம்:
சேலம் அருகே வெவ்வேறு இடங்களில், புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தற்கொலை
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா (வயது 26).
இவர்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர், பிருந்தா நேற்று மாலை வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிருந்தாவின் கணவன் மணிகண்டனை சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமாப்பிள்ளை
சேலம் மாமாங்கம் டாக்டர்ஸ் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மணிகண்டன் (27). கார் டிரைவர். இவரது மனைவி பிரதிக்சா. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது.
இந்தநிலையில் பிரதிக்சா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு கருப்பூரை அடுத்துள்ள நெரிஞ்சிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் மணிகண்டன் வீட்டிற்கு அருகே உள்ள ஒருவர் மணிகண்டனை நேற்று இரவு 8 மணி அழைத்து உள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் மணிகண்டன் வராததால் சந்தேகம் அடைந்தார். உடனடியாக மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.
விசாரணை
இதுதொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மனைவி கோபித்து சென்று விட்டதால் மணிகண்டன் விரக்தியில் இருந்தது தெரியவந்தது. மணிகண்டன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story