கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தம்
கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் இன்று முதல்14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார் இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக எல்லை பகுதியான புளிஞ்சூர், பாரதிபுரம், பகுதியில் கர்நாடக மாநில போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன அத்தியவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கம் போல் சென்று வருகின்றன அதே போல் தாளவாடி இருந்து சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள், கார், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் புளிஞ்சூர் சாலை வழியாக செல்ல அனுமதி மறுப்பதால் தலமலை வழியாக மாற்று பாதையில் சென்று வருகிறது. தாளவாடி செல்லும் வாகனங்கள் மட்டும் புளிஞ்சூர் வழியாக செல்ல அனுமதி அளிக்கவேண்டும். தலமலை பாதை வனச்சாலை என்பதால் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாது. எனவே புளிஞ்சூர் சாலை வழியாக தாளவாடி வாகனங்கள் செல்ல அனுமதி பெற்றுதரவேண்டும் எனவும் மலைகிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story