தாம்பரம் அருகே மத்திய அரசு சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தாம்பரம் அருகே மத்திய அரசு சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2021 8:06 AM IST (Updated: 29 April 2021 8:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 18 சேமிப்பு கிடங்கு உள்ளது.

 இங்கு சென்னை புறநகர் பகுதிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு மாதாமாதம் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தென்சென்னை பகுதிக்கு ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் கிடங்கு விருகம்பாக்கத்தில் இருந்து காலி செய்யப்பட்டு இங்கு மாற்றப்பட்டது. இதற்கான ரேஷன் பொருளை இறக்க விருகம்பாக்கம் கிடங்கில் வேலை பார்த்த 42 தொழிலாளர்களை உணவு வழங்கல் துறையினர் சிட்லபாக்கம் அழைத்து வந்து பணியில் அமர்த்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்லபாக்கம் கிடங்கில் வேலை பார்த்த தொழிலாளர்கள் நேற்று காலை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை பொதுச்செயலாளர் கே.ரவி தலைமையில் மத்திய சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சமூக சமத்துவ படை கட்சி நிறுவன தலைவர் டாக்டர் சிவகாமி ஐ.ஏ.எஸ். உள்பட பலர் கலந்து கொண்டனர். தாம்பரம் தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

 


Next Story