திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 April 2021 5:48 AM GMT (Updated: 29 April 2021 5:48 AM GMT)

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் வசூலிப்பு

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே சென்னை வடக்கு துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மோகன், பன்னீர்செல்வம், திருத்தணி போக்குவரத்து ஆய்வாளர் லீலாவதி ஆகியோர் அதிவேகமாக வரும் வாகனங்களை ரேடார் கருவியின் உதவியுடன் கண்காணித்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த 21 வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

மேலும் அவற்றுக்கான கூடுதல் அபராத தொகையாக ரூ. 65 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த தொகை ரூ.85 ஆயிரம் விதிக்கப்பட்டது.

அதிக விபத்துகள்

மேலும் வாகன தணிக்கை குறித்து போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், வாகனங்களை அரசு நிர்ணயித்த வேகத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தணிக்கை செய்யப்பட்டது என்றார்.


Next Story