சாத்தான்குளத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை


சாத்தான்குளத்தில்  வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 April 2021 6:10 PM IST (Updated: 29 April 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அரசு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து பகுதியிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

கொரோனா பரிசோதனை

சாத்தான்குளத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. மருத்துவ அலுவலர் அட்சரா மேற்பார்வையில் ஆய்வக நுட்புனர் அஜிதா, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மருந்தாளுனர் கோமதி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story