கொரோனா பரவல்: கோவில்பட்டியில் 11 கடைகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் 11 கடைகள் மூடப்பட்டன.
கோவில்பட்டி:
கொரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் 11 கடைகள் மூடப்பட்டன.
கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவில் உள்ள கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜா ராம் அறிவுரையின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள்
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்க்கெட் என 11 கடைகளை மூடினார்கள். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
பரிசோதனை முகாம்
கோவில்பட்டி நகரில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நகரைச் சேர்ந்த 78 பேரும், தனியார் கல்லூரி மருத்துவ மையத்தில் 20 பேரும், வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள் 112 பேரும் என மொத்தம் 263 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்கள்.
மேலும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் கொரோனா இலவச பரிசோதனை முகாம் டாக்டர் மனோஜ் தலைமையில் மருத்துவ குழுவினரால் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் என் 156 பேருக்கு சோதனை செய்து சளி மாதிரி எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story