அய்யன்கொல்லி அருகே குடிசைகள் தீ வைத்து எரிப்பு
அய்யன்கொல்லி அருகே குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பாதிமூலா கிராமம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் சிலர் புதிதாக 2 குடிசைகள் அமைத்தனர்.
இந்த குடிசைகளுக்கு மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் இரவு தீ வைத்தனர். இதில் குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு பார்வையிட்டார்.
தொடர்ந்து தாசில்தார் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் முரளி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story