போடியில் அதிகாரிக்கு கொரோனா வங்கி மூடல்


போடியில் அதிகாரிக்கு கொரோனா வங்கி மூடல்
x
தினத்தந்தி 29 April 2021 8:22 PM IST (Updated: 29 April 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

போடியில் வங்கி அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது.

போடி:
போடி போலீஸ்நிலையம் பின்புறம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் சக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Next Story