துப்பாக்கி தோட்டாக்களுடன் தனியார் நிறுவன காவலாளி பிடிபட்டார்
துப்பாக்கி தோட்டாக்களுடன் தனியார் நிறுவன காவலாளி பிடிபட்டார்
கோவை
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் தனியார் நிறுவன காவலாளி பிடிபட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தனியார் நிறுவன காவலாளி
ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர் ஜோகிந்தர் குமார் (வயது 42). இவர் கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலை யொட்டி ஜோகிந்தர் குமார் தனது துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் அவர் தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அவர், டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்து இருந்தார்.
துப்பாக்கி தோட்டாக்கள்
அப்போது அவரது பைகள் விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த பைக்குள் துணிக்குள் மறைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் கண்டுபிடித்தனர். அதில் 5 தோட்டாக்கள் இருந்தன.
உடனே அவர் விமானத்தில் பயணம் செய்ய விடாமல் தடுக்கப்பட்டு பீளமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர், விமான நிலையத்துக்கு வருவதற்காக அவசரமாக கிளம்பும்போது தனது பையில் துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்ததை கவனிக்க தவறி விட்டேன். என்னிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது என்று கூறினார்.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து அவரது துப்பாக்கி உரிம ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டது. பின்னர் அவரிடம், எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய் யப்பட்டது.
இதனால் ஜோகிந்தர்குமார் அடுத்த விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story