வாகனம் மோதி வாலிபர் சாவு


வாகனம் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 29 April 2021 9:48 PM IST (Updated: 29 April 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சிவகார்த்திக்  (வயது 26). ஏரல் அருகே உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் சிவகார்த்திக் புறப்பட்டார். குடும்பத்தினர் ஒரு காரிலும், சிவகார்த்திக் மோட்டார் சைக்கிளிலும் சென்று கொண்டு இருந்தனர்.

ஆழ்வார்திருநகரி அருகே தெப்பக்குளம் வளைவில் செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story