மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மாணவர் பலி
ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மாணவர் பலியானார்.
ரிஷிவந்தியம்,
சங்கராபுரம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் வாசுதேவன் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். இவர் ரிஷிவந்தியம் அருகே ஏந்தல் கிராமததில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் ஏந்தல் கிராமத்திலிருந்து பகண்டை கூட்டுரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ரெட்டியார்பாளையம் கிராமம் அருகே சென்றபோது பெரியபகண்டை கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 25) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வாசுதேவன், அய்யப்பன் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வாசுதேவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வாசுதேவன் பரிதாபமாக இறந்தார். இதனிடையே அய்யப்பன் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story