குமரலிங்கம் பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
குமரலிங்கம் பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
போடிப்பட்டி
குமரலிங்கம் பகுதியில் பல வீதிகளில் சாக்கடைக் கால்வாய்களே அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. குமரலிங்கம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக்கால்வாய்கள் மூலமாக ராஜவாய்க்காலில் கொண்டு சென்று கலக்கப்படுகிறது.ராஜவாய்க்காலுக்கு மறுபுறம் உள்ள குடியிருப்புகளில் சாக்கடைக்கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளின் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரில் பாலிதீன் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சேர்ந்து கொசு உற்பத்திக்குக் காரணமாகிறது. சில இடங்களில் வீதிக்குக்குறுக்கே கழிவுநீர் செல்கிறது. இதனால் குழந்தைகளும் முதியவர்களும் அடிக்கடி கழிவு நீரில் வழுக்கி விழும் நிலை உள்ளது. இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சாக்கடைக்கால்வாய்கள் அமைக்கப்பட்டாலும் கழிவுநீரை நீர்நிலைகளில் கொண்டு போய் கலக்கும் நிலை தான் ஏற்படும். எனவே அதற்கு மாற்றாக கழிவுநீரை நிலத்தடி நீராதாரமாக மாற்றும் வகையில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தனி நபர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளிலும் விரிவு படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து வீடுகளிலும் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும் போது சாக்கடைக்கழிவு நீர் வீதியில் வழிவதும் நீர் நிலைகளில் கலப்பதும் தடுக்கப்படும். அத்துடன் இந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் வாய்ப்பு உருவாகும் என்று பொதுமக்கள் கருத்துதெரிவித்தனர்.
Related Tags :
Next Story