வேலூர் அரசு மருத்துவமனையில் திருப்பி அனுப்பப்படும் கொரோனா நோயாளிகள்
வேலூர் அரசு மருத்துவமனையில் திருப்பி அனுப்பப்படும் கொரோனா நோயாளிகள்
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சிறப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களும் கொரோனா வார்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருவதால் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை அனுமதிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே அடுக்கம்பாறைக்கு வரும் கொரோனா நோயாளிகள் பிற மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story