சென்னையில் இருந்து ரெயிலில் அழைத்துவந்து ஜோலார்பேட்டையில் குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான தாய்


சென்னையில் இருந்து ரெயிலில் அழைத்துவந்து ஜோலார்பேட்டையில் குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான தாய்
x
தினத்தந்தி 29 April 2021 9:55 PM IST (Updated: 29 April 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து 2 குழந்தைகளை ரெயில் மூலம் அழைத்து வந்து ஜோலார்பேட்டையில் தாய் தவிக்கவிட்டு விட்டு மாயமானார். குழந்தைகளை போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.

ஜோலார்பேட்டை

சுற்றித்திருந்த சிறுவர்கள்

ஜோலார்பேட்டை போலிசார், நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனை செய்தனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் ஒரு சிறுவனும், சிறுமியும் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தைகளை அவர்களுடைய தாயே விட்டுச்சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களுடய தந்தையின் தந்தையின் செல்போன் எண்ணை பெற்று குழந்தைகளின் படத்தை போலீசார் அனுப்பி வைத்து போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

தந்தையிடம் ஒப்படைப்பு

நேற்று மாலை குழந்தைகளின் தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகளின் தந்தை சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பதும், ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. 

லோகேசின் மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஹரிஷ் (வயது 4) என்ற ஆண் குழந்தையும், ஜீவிதா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் இரவு மீனாட்சி அழைத்துக்கொண்டு ெரயில் மூலம் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார். 

தவிக்கவிட்டு சென்ற தாய்

அங்கு ஜங்ஷன் பஸ்நிறுத்தத்தில் 2 குழந்தைகளையும் விட்டு விட்டு மீனாட்சி மாயமாகி விட்டார். இதனால் ்குழந்தைகள் இருவரும்எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்துள்ளனர். 
மீட்கப்பட்ட 2 பேரையும் தந்தை லோகேஷ், தாத்தா சதாசிவம், மகேஷ்வரி ஆகியோரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஒப்படைத்து மீண்டும் இது போன்று நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

மேலும் ஜோலார்பேட்டை ஜங்சன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானகாட்சிகளை கொண்டு மீனாட்சி எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story