அரக்கோணத்தில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள 8 கடைகள் மூடப்பட்டன
அரக்கோணத்தில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள 8 கடைகள் மூடப்பட்டன
அரக்கோணம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகங்களை் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அரக்கோணம் நகராட்சியில் ஆணையாளர் ஆசீர்வாதம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் அருள்தாஸ், ஸ்ரீகாந்த், வனஜா, குணசேகரன் மேலாளர் கோபிநாத் ஆகியோர் நகராட்சி ஊழியர்களுடன் சுவால்பேட்டை, பழனிபேட்டை, பஜார் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், சூப்பர் மார்கெட், ஷோரும்களில் அளவீடு செய்தனர்.
அப்போது 3,000 சதுர அடிக்கு மேற்பட்ட ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், ஷோரும் என 8 கடைகளை மூட ஆணையாளர் ஆசிர்வாதம் உத்தரவிட்டார். மேலும் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள், ஷோரூம்கள், வணிக நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து மூட வேண்டும், தவறும் பட்சத்தில் ரூ.5,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story