சோளிங்கர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய சிலருக்கு தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை

சோளிங்கர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய சிலருக்கு தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 29 April 2021 9:55 PM IST (Updated: 29 April 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய சிலருக்கு தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை

நெமிலி

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சானிடைசர், கிளவுஸ் வழங்கவும், கிரிமிநாசினி தெளிக்கவும் துப்புரவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் தபால் வாக்களிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக பணியமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு இதுவரை தபால் வாக்கு சீட்டு கிடைக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தபால் வாக்கு சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story