கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளதா, தேவையான ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சதீஷ்குமார், கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் பழமலை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story