அடிக்கடி பழுதாகும் அரசு டவுன் பஸ்
டவுன் பஸ் பழைய பஸ் என்பதால் அடிக்கடி பழுதாகி ரோடுகளிலேயே நின்று விடுவதால் அந்த பஸ்சில் செல்லும் பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
கீரமங்கலம்,
கீரமங்கலம் - கொத்தமங்கலம் வழியாக ஆலங்குடி, மேற்பனைக்காட்டுக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த டவுன் பஸ் பழைய பஸ் என்பதால் அடிக்கடி பழுதாகி ரோடுகளிலேயே நின்று விடுவதால் அந்த பஸ்சில் செல்லும் பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர். நேற்று மதியம் ஆலங்குடியில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் வழியில் கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் பழுதாகி நடுவழியில் நின்றது. மீண்டும் அந்த பஸ்சை இயக்க முடியாமல் தவித்த ஓட்டுனர் கடும் வெயிலில் சூடாகி இருந்த தார் சாலையில்படுத்து கிடந்து பழுதை நீக்க முயற்சி செய்தார். நீண்ட நேரம் முயன்றும் சரி செய்ய முடியாததால் பயணிகளை ஏற்றாமல் ஆலங்குடி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடிக்கடி இந்த டவுன் பஸ் பழுதாவதால் புதிய பஸ் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story