கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பல்லடத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பல்லடத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய்  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
தினத்தந்தி 29 April 2021 10:15 PM IST (Updated: 29 April 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பல்லடத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம்
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பல்லடத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய்  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 குழந்தைகளின் தாய்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 29). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிருந்தா(7), பிரசந்தா(5) ஆகிய 2  பெண் குழந்தைகள் இருந்தனர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த தமிழ்ச்செல்வி தனது 2 குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தார். பின்னர் லட்சுமி மில் பகுதியில் வசித்து வந்த தனது தம்பி முருகன் வீட்டில் தங்கிக்கொண்டு, அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் வேலைக்கு சென்று வந்தார்.
வற்புறுத்தல்
இந்த நிலையில் கடந்த வாரம் உறவினர் ஒருவர் மூலமாக தமிழ்ச்செல்வி உடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக அவரது கணவர் பிரபு சொல்லி அனுப்பி உள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கணவர் பிரபுவுடன் சேர்ந்து வாழும்படி தமிழ்ச்செல்வியை அறிவுறுத்தியுள்ளனர். 
இதற்கு தமிழ்ச்செல்வி மறுக்கவே, பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளனர். 
பாலில் எலி மருந்து
இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி, கடந்த 27-ந்தேதி இரவு, குழந்தைகளுக்கு, பாலில், எலி மருந்தை கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். ஆனால் மருந்தின் அளவு குறைவாக இருந்ததால் இவர்களுக்கு வயிற்றுப்போக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது. 
இதனால் 28-ந்தேதி தேதி காலை மீண்டும் குழந்தைகளுக்கு எலிமருந்தை பாலில் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மயங்கி விழுந்தது. இதையடுத்து இவரது தம்பி முருகன் உள்ளிட்ட உறவினர்கள். குழந்தைகள் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். 
சாவு 
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் பிருந்தா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாள். மற்றொரு குழந்தை பிரசந்தா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தாள்.
தமிழ்ச்செல்வி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story