ஊத்துக்குளி பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்
ஊத்துக்குளி பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் மண்
ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் கடந்த 3 மாத காலமாக அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளுக்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்து 2 மாதங்கள் ஆகியும் செங்கப்பள்ளியிலிருந்து குன்னத்தூர் செல்லும் பிரதான சாலையில் குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் குழி தோண்டி மிதமான மண் சாலையில் கொட்டிக் கிடக்கின்றது.இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டு வருகின்றனர்.சில சமயம் இரவு நேரங்களில் மண் இருப்பது தெரியாமல் விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
அத்திக்கடவு-அவினாசி திட்ட ஒப்பந்ததாரர்கள் தான் இதனை சரி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இதனை சரி செய்வார்கள் என அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஒப்பந்ததாரர்கள் கூறி வருவதால் பல மாதங்களாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருவரில் யாராவது ஒருவர் சாலையில் கொட்டிக்கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story