பார்வையற்ற தம்பதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் பாராட்டு


பார்வையற்ற தம்பதிக்கு பல்லடம்  நகராட்சி நிர்வாகம் பாராட்டு
x
தினத்தந்தி 29 April 2021 10:29 PM IST (Updated: 29 April 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

பார்வையற்ற தம்பதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் பாராட்டு

பல்லடம்
பல்லடம் நகராட்சி நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி(வயது 52), இவருடைய மனைவி சாந்தி( 47) இவர்கள் இருவருக்கும் கண்பார்வை இல்லை.
இந்த நிலையில், நேற்று நாராயணபுரத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பல்லடம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தம்பதியினர் வசிக்கும் வீட்டிற்கு 2021- 2022 ஆண்டிற்கான, சொத்து வரி ரூ.420-ஐ வரிவசூல் மையத்தில் செலுத்தி அதற்கான ரசீதும் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் கணேசன், வரிவசூல் மையத்திற்கு வந்து அந்த தம்பதியினரை பாராட்டினார். 

Next Story