திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பலியாகினர்.
கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 979-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 870-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 871 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், திருப்பூரை சேர்ந்த 40 வயது ஆண் கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுபோல் 83 வயது ஆண் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது பலி எண்ணிக்கை 238-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story