19 பேர் மீது வழக்கு


19 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 April 2021 10:46 PM IST (Updated: 29 April 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி 5 விளக்கு அருகில் தமிழக மக்கள் மன்றம் சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்றினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும் மக்கள் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story