ஊருணியில் மூழ்கி சிறுமி பலி


ஊருணியில் மூழ்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 29 April 2021 10:58 PM IST (Updated: 29 April 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலியானார்.

காளையார்கோவில்

காளையார்கோவில் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தை அடுத்த தனிவீரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு சாலினி (வயது 5), ஜனனி (4) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். நேற்று முன்தினம் மதியம் பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் இவர்கள் இருவரும் தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக ஊருணிக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி ஜனனி பலியானாள்.இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story