தினமும் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி


தினமும் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 29 April 2021 11:30 PM IST (Updated: 29 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் தினமும் சராசரி 40 முதல் 50 பேருக்கு கொேரானா தடுப்பூசி போடப்படுகிறது. கொேரானா தடுப்பூசி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செலுத்தப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, தடுப்பூசி செலுத்த வரும் நபருக்கு சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு மணி நேரம் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அதன்பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றார்.

Next Story