வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி


வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி
x
தினத்தந்தி 29 April 2021 11:30 PM IST (Updated: 29 April 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமயம்,ஏப்.30-
திருமயம் அருகே உள்ள லெம்பலக்குடி கிராமத்தில் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே லெம்பலக்குடி அம்பாள் கோவில் முன் நடைபெற்ற வேளாண்மை மற்றும் பணி அனுபவத்திட்டம் களப்பணியில் ஊர்பொதுமக்கள், முன்னோடி விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர். பின்னர் லெம்பலக்குடி கிராம மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் வண்ணப்பொடிகள் பயன்படுத்தி மாதிரி கிராமம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஊரணி, குளங்கள், கோவில்கள், வயல்கள் மற்றும் கிராம நில அமைப்பை கல்லூரி மாணவிகளுக்கு கோலமாக வரைந்து காண்பித்தனர்.

Next Story