வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா
வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தலைமை தபால் நிலைய ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
தபால் நிலைய ஊழியர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. குமரி மாவட்டத்தில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசுத்துறை அதிகாரிகளும், தனியார் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை தபால் நிலையத்தில் இரண்டாவது மாடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள்
இதேபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் ஊழியர்கள் நேற்று காலை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர்.
பின்னர் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக அந்த அலுவலகம் மூடப்பட்டது. அங்கு பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஏற்கனவே வல்லன்குமரன்விளை, வாட்டர் டேங்க் ரோடு பகுதி, வடசேரி கனக மூலம் புதுதெரு பகுதி ஆகியவை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு 14 நாட்கள் ஆனதை தொடர்ந்து தற்போது அங்கிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story