மது விற்ற 5 பேர் கைது
மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
நொய்யல்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெரியரெங்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்து மது விற்றதாக பெரியரெங்கம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 51) கைது செய்யப்பட்டார். மேலும் அதே பகுதியில் மது விற்ற வசந்தா(63), புன்னம்சத்திரம் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (33), நொய்யல் அருகே மரவாபாளையம் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற மகுடேஸ்வரர்(45), மூலிமங்கலம் பிரிவு அருகே ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த மணிமுத்து (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story