ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திய 2 பேர் கைது


ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 12:10 AM IST (Updated: 30 April 2021 12:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,
ஸ்ரீரங்கம் தாத்தாசாரியார் தோப்பு அருகே காவிரி ஆற்றில் இருந்து சரக்கு வாகனத்தில் மணல் திருடியதாக ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 30), திருவானைக்காவலை சேர்ந்த ராஜா(25) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story