புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 April 2021 12:12 AM IST (Updated: 30 April 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கரூர்
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
138 பேருக்கு பாதிப்பு
இருந்துபோதிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. ஆரம்பத்தில் ஒன்றை இலக்கத்தில் இருந்த தொற்று கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவி வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 85 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 894 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story